தற்போதைய செய்திகள்

"சில்லறை இல்லைனா பஸ்ஸை விட்டு இறங்கு" பெண்ணை தகாத வார்த்தையால் திட்டிய கண்டக்டர் "அவர் தள்ளி விட்டு ஒரு பெண்ணுக்கு அபார்ஷன் ஆகியிருக்கு"

தந்தி டிவி
• சிவகங்கை மாவட்டம் குட்டிதின்னி கிராமத்தை சேர்ந்தவர் சோபனாதேவி. • இவர் சிவகங்கை வழியாக மதுரை செல்லும் அரசு பேருந்தில் ஏறிய நிலையில், 200 ரூபாய் நோட்டை அளித்து டிக்கெட் கேட்டுள்ளார். • ஆனால் நடத்துனர் வேளாங்கன்னியோ, சில்லறை இல்ல என கூறியதோடு, சோபனாதேவியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். • இதனைக்கண்ட சக பயணிகள் நடத்துனரிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். • இதனையடுத்து பேருந்து காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. • அங்கு பயணிகளும், ஏற்கனவே வேளாங்கன்னி தள்ளி விட்டதால் அபாசர்னுக்கு ஆளான பூவந்தி என்பவரும் வேளாங்கன்னியோடு வாக்குவாதம் செய்தனர். • தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வேளாங்கன்னி மீது புகார் அளிக்கப்பட்டது. • புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், இருவரையும் சமாதனப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்