தற்போதைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கரின் சின்னக் கொம்பன் காளைக்கு காயம்..உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு

தந்தி டிவி

புதுக்கோட்டை மாவட்டம் வடசேரி பட்டியில் உள்ள பிடாரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் புதுக்கோட்டை திருச்சி சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 700 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான சின்னக் கொம்பன் காளை,வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடும்போது, அங்குள்ள கட்டையில் மோதி, அங்கேயே மயக்கம் அடைந்து கீழே விழுந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஏற்கனவே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தென்னலூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் விஜயபாஸ்கருக்கு சொந்தமான பெரிய கொம்பன் காளை இதேபோன்று உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்