ஜோர்டனில் கட்டட இடிபாடுகளில் சிக்கிய கைக்குழந்தை ஒன்று 24 மணி நேரம் கழித்து பத்திரமாக மீட்கப்பட்ட பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன... தலைநகர் அம்மானில் 4 மாடி கட்டடம் ஒன்று திடீரென்று இடிந்து விழுந்தது... இதில் இடிபாடுகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். ஆனால் அந்த சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத அதிசயம் ஒன்று நிகழ்ந்தது... உள்ளே சிக்கிக் கொண்ட 10 மாத குழந்தை ஒன்றை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். குழந்தையின் தாய் வெளியில் சென்றிருந்ததால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்... ஆனால் 10 பேரை பலி கொண்ட கட்டட இடிபாட்டில் 10 மாத குழந்தை உயிர் பிழைத்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.