தற்போதைய செய்திகள்

தன்னுடன் வேலைபார்ப்பவர் உறங்கிக் கொண்டிருந்த போது...சக ஊழியர் செய்த கொடூர செயல்

தந்தி டிவி

திருப்பூரை சேர்ந்த ராம்குமார் என்பவர், புதுச்சேரியில் உள்ள குருமாம்பேட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில், ராமநாதபுரத்தை சேர்ந்த கருணா என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவரும் தொழிற்சாலை வளாகத்தில் கொடுக்கப்பட்டிருந்த அறையில் ஒன்றாக தங்கியிருந்தனர். இந்த நிலையில், ராம்குமாருக்கும், கருணாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்களை சக ஊழியர்கள் சமாதானம் செய்து வைத்தனர். இந்த நிலையில், ராம்குமார் உறங்கிக் கொண்டிருந்த போது, அவரது தலையில் கட்டையை வைத்து கருணா தாக்கினர். இதில் படுகாயமடைந்த ராம்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், தப்பியோடிய கருணாவை தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்