தற்போதைய செய்திகள்

'விக்ரம் வெளியிட்ட மிரட்டலான புகைப்படங்கள்'.. 'டை ஹார்டு' புகழ் ப்ரூஸ் வில்லிஸ்-க்கு வந்த சோதனை.. வேதனையில் ரசிகர்கள்

தந்தி டிவி
• தங்கலான் பட கெட்டப்பில் விக்ரம் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. • Back to the future என்ற வாசகத்துடன் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார் விக்ரம். • ஸ்டைலான கூலுங் கிளாஸ் உடன் விக்ரம் இருக்கும் இந்த புகைப்படங்கள், படத்தின் போஸ்டரை போல் இருப்பதாகவும் தற்போது தங்கள் செல்போனில் வால்பேப்பர் இதுதான் என்றும் பூரித்து வருகின்றனர் ரசிகர்கள்.
• 2009-ம் ஆண்டு வெளியான "3 idiots" படத்தில் "Farhaan" என்ற கேரக்டரில் நடித்திருந்தார் மாதவன். • அந்த படத்திற்கான ஆடிஷனில் கலந்துகொண்டு மாதவன் நடித்திருந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது. • ஆடிஷனில் அவர் பேசியிருந்த சில வசனங்கள் படத்தில் இடம்பெறவில்லை. • அவற்றை நீக்கியிருக்க வேண்டாமே என்று ரசிகர்கள் கமென்ட் செய்யும் அளவிற்கு மிகவும் எதார்த்தமாக நடித்திருந்த மாதவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
• டை ஹார்டு படத்தின் மூலம் உலகம் முழுக்க ரசிகர்களை கவர்ந்த நடிகர் ப்ரூஸ் வில்லிஸ்-க்கு Fronto Temporal Dementia என்ற அரிய வகை குறைபாடு இருப்பது தெரிய வந்துள்ளது. • கடந்த ஆண்டு Aphasia என்ற பேசும் குறைபாடு பாதிப்பு காரணமாக இனி அவர் படங்களில் நடிக்க மாட்டார் என அவரது குடும்பத்தினர் அறிவித்திருந்தனர் . • ஆனால் அது Fronto Temporal Dementia-வின் பல அறிகுறிகளில் ஒன்று மட்டுமே என்று தற்போது தெரிய வந்துள்ளது. • மூளையில் உள்ள முன்மடல் மற்றும் பொட்டு மடல் சுருங்க தொடங்குவதுதான் இந்த குறைபாடு. • இதனால் நடத்தையில் மாற்றம், பேசுவது மற்றும் புரிந்துகொள்வதில் சிரமம், முரட்டுத்தனமாக் நடந்துகொள்வது, காரணம் இல்லாமல் அழுவது உள்ளிட்ட பல சிரமங்கள் ஏற்படும். • தனது ஆக்‌ஷன் அதிரடி நடிப்பில் பல கோடி ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகருக்கு 67 வயதில் இப்படி ஒரு குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. • இந்த குறைபாட்டை குணப்படுத்த இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது அதை விட மோசமான செய்தியாக உள்ளது. • படங்களில் நடிப்பதை நிறுத்திய பிறகு தனது குடும்பத்துடன் அவர் செலவிட்ட நிமிடங்களை வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை