தற்போதைய செய்திகள்

அண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தம்பி...சமயம் பார்த்து அண்ணன் செய்த செயல் - கடைசியில் சொன்ன பகீர் வாக்குமூலம்

தந்தி டிவி

சொந்த அண்ணன் மனைவிக்கே பாலியல் தொல்லை கொடுத்த தம்பியை சமயம் பார்த்து அண்ணன் கொலை செய்த சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.செஞ்சி மாவட்டம் ஜெயங்கொண்டம் கிராமத்தில் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்கள் சீனுவாசன் - தாய்ப்பால் தம்பதி.இவர்களுக்கு நான்கு மகன்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரான வீரமுத்து என்பவர் சென்னையில் லாரி ஓட்டுனராக பணி புரிந்து வந்துள்ளார். இதனால் அவர் அடிக்கடி ஜெயங்கொண்டத்திற்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் அண்ணனான மாரிமுத்துவின் மனைவிக்கு யாரும் இல்லாத சமயத்தில் வீரமுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த மாரிமுத்து தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து தனது தம்பியை தீர்த்து கட்ட முடிவு செய்திருக்கிறார். அதன்படி இருசக்கர வாகனத்தில் வந்த வீரமுத்துவை வழிமறித்து அவரை தலை மற்றும் கைகளில் கொடூரமாக வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். படுகாயமடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமத்தித்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்த நிலையில் தம்பியை தான் தான் கொன்றேன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார் வீரமுத்து. இந்நிலையில் அவரை கைது சிறையில் அடைத்தனர்....

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை