தற்போதைய செய்திகள்

பிபி நோயாளியின் உயிரோடு விளையாடிய ஆரம்ப சுகாதார நிலையம்

தந்தி டிவி

ராணிப்பேட்டையில் ரத்த அழுத்த மாத்திரைக்கு பதிலாக கொழுப்பு மாத்திரைகள் வழங்கியதாக கூறி ஆரம்ப சுகாதார நிலையத்தின் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாலாப்பேட்டை கிராமத்தை சேர்ந்த ஜோதி என்பவர், ரத்த அழுத்த பிரச்சினை தொடர்பாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார்.

கடந்த மாதம் 12 -ஆம் தேதி மருந்துகள் வாங்க சென்றபோது ஊழியர்களின் அலட்சியத்தினால் ரத்த அழுத்த மாத்திரைக்கு பதிலாக கொழுப்பு மாத்திரைகள் தரப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜோதி சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த ஜோதியின் மகன் சிவக்குமார், ஆரம்ப சுகாதார நிலையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளார்.

🔴LIVE : CM Vijay | TVK | MLA | உதயநிதி தொட்ட விஷயம்.. அமைச்சர் ஆதவ் ஆக்ரோஷம்

CJP |Delhi | Supreme Court | மாணவர்கள் மீது தாக்குதல் - களமிறங்கும் டீம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி

Minister Vignesh | "இந்த மிரட்டுறதுலாம் இந்த வேணாம்.." அமைச்சர் பரபரப்பு பேட்டி

"சபாநாயகர் எடுத்த நடவடிக்கை சரி தான்"ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || தமிழகமே எதிர்பார்த்த `மேகதாது’ விவகாரம் - சென்னையில் மவுனம் கலைத்த DKS