தற்போதைய செய்திகள்

தீம் பார்க்கில் மூச்சுத் திணறி சிறுவன் பலி.. "ஐய்யோ என் பையன் போய்ட்டான்.." - மகனின் சடலத்தை விடாமல் கட்டிப்பிடித்து கதறிய தாய்

தந்தி டிவி

சேலத்தில் தனியார் தீம் பார்க்கில், தண்ணீரில் மூழ்கி 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

சேலம் எருமாபாளையம் பகுதியை சேர்ந்த ரஞ்சித், உஷா தம்பதி தங்களது இரண்டு மகன்களுடன் மல்லூர் அருகே உள்ள தனியார் தீம் பார்க்கிற்கு சென்றுள்ளனர். அப்போது தம்பதியினரின் மூத்த மகன் சௌடேஸ்வரன் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளார். உடனடியாக சௌடேஸ்வரனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகனின் சடலத்தை பார்த்து அவரின் தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி பார்ப்போரை கலங்க வைத்தது...

Amitshah | Pralhad Joshi | அமித்ஷாவை சந்தித்த புதிய கல்வி அமைச்சர் - திடீர் மீட்டிங்

Breaking | TNPL | Women | IPL போல தமிழ்நாட்டில் இனி மகளிருக்கும்.. | வெளியானது அப்டேட்

PM Modi | திடீரென இன்ஸ்டாவில் PM மோடி.. வெளியானது புதிய வீடியோ

Actor Dhanush | "இந்த படத்திற்கு ஏன் தேசிய விருது" - உடைத்து பேசிய நடிகர் தனுஷ்

Fire cracker Accident | சிவகாசி கொடூர பட்டாசு விபத்து.. அதிகரிக்கும் பலி எண்ணிக்கை