தற்போதைய செய்திகள்

தீபாவளிக்கு ரயில் டிக்கெட் போட்டாச்சா..?10 நிமிடத்தில் எல்லா டிக்கெட்டுகளும் காலி.. இன்னும் இரண்டே நாள் தான்..

தந்தி டிவி

தீபாவளி பண்டிகையை ஒட்டி நவம்பர் 9ம் தேதி பயணம் செய்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று துவங்கிய நிலையில், தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பெரும்பாலான ரயில்களில் டிக்கெட் விற்று தீர்ந்தன.

வரும் நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ரயில்களை பொறுத்தவரை கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படும். அந்த வகையில் தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 9ம் தேதி பயணம் செய்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று துவங்கியது. மதுரை, நெல்லை, தூத்துக்குடி, குமரி போன்ற தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்களான கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ் ஆகிய விரைவு ரயில்களில் 2ம் வசதி படுக்கை டிக்கெட்டுகள் 10 நிமிடங்களுக்குள்ளாக விற்றுத் தீர்ந்தன. நவம்பர் 10ம் தேதிக்கு நாளையும், நவம்பர் 11ம் தேதி பயணத்திற்கு ஜூலை 14ம் தேதியும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க பயணிகள் விரைந்து முன்பதிவு செய்து கொள்ள ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. சிறப்பு ரயில் மற்றும் அதற்கான டிக்கெட் முன்பதிவு அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது

CM MK Stalin Latest News | முதல்வர் ஸ்டாலின் போட்ட திடீர் ட்வீட்

ECI | TN Election | Vote Counting | "மே 4ம் தேதி; தமிழகம் முழுவதும்" தேர்தல் ஆணையம் முக்கிய அப்டேட்

Puducherry Liquor | புதுச்சேரியில் இருந்து 4.5 லிட்டர் மது கொண்டு வரலாமா? கூடாதா?

Madras High Court | 2 தொகுதிகளில் போட்டியிடும் நபர்களுக்கு குட்நியூஸ்

Gold Rate Today | நீண்ட நாட்களுக்கு பிறகு.. இன்று சற்று `அதிகமாக’ குறைந்த தங்கம் விலை