திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெற்ற படகு அலங்கார போட்டி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது
நட்சத்திர ஏரியில், 7-வது நாள் கோடை விழாவையொட்டி நடத்தப்பட்ட படகு அலங்கார போட்டியை, காவல் கண்காணிப்பாளர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், சுற்றுலாத்துறை சார்பில் ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது போன்றும், தோட்டக்கலை துறை சார்பாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்பைடர் மேன் உள்ளிட்டவை, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தன.