தற்போதைய செய்திகள்

சொந்த கட்சி நிர்வாகிக்கு பகிரங்க மிரட்டல் - பெண் திமுக கவுன்சிலரின் கணவர் அராஜகம்

தந்தி டிவி

பேனர் வைக்கக்கூடாது என சொந்த கட்சி நிர்வாகியை மிரட்டிய திமுக கவுன்சிலரின் கணவர் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சென்னை பழையவண்ணாரப் பேட்டையை சேர்ந்தவர் தமிமுன் அன்சாரி. இவருக்கு திமுகவில் சிறுபான்மை அணியின் வடசென்னை மாவட்ட தலைவராக பதவி வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு ஆதரவாக கட்சி சிறுபான்மை அணியினர் பேனர் வைக்க சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த திமுக கவுன்சிலரின் கணவர் ஜெகதீசன், தமிமுன் அன்சாரியிடம் தகாத வார்த்தையில் பேசியதுடன், மதரீதியாக அவதூறாக பேசியதாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், பேனர்களை வைத்தால் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தமிமுன் அன்சாரி, இதுதொடர்பாக ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ராயப்புரம் போலீசார்

51 வது வார்டு திமுக கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஜெகதீசன் மீது ஏற்கனவே மாமூல் கேட்டு மிரட்டியது, போலீசார் மிரட்டியது என பல வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்