தற்போதைய செய்திகள்

பாஜக பெண் நிர்வாகிகளை விமர்சித்த விவகாரம்-திமுக நிர்வாகிக்கு பாஜக மகளிர் அணி கண்டனம்

தந்தி டிவி

பாஜக பெண் நிர்வாகிகளை தகாத வார்த்தையால் விமர்சித்த திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க‌க்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், பாஜக மாநில மகளிர் அணி பொதுச்செயலாளர் ந‌தியா புகார் அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குஷ்பு, நமீதா, கவுதமி மற்றும் காயத்திரி ரகுராம் ஆகியோரை திமுக மாவட்ட அமைப்பாளர் சைதை சாதிக் என்பவர் இழிவாக பேசியதை கண்டித்துள்ளார்.

பெண்கள் மீது தரக்குறைவான வார்த்தைகளால் தனிமனித தாக்குதலை திமுகவினர் நடத்தி வருவதாக குற்றம் சாட்டிய ந‌தியா, திமுகவினர் இது போன்று நாகரீகம் அறியாமல் தரக்குறைவாக பேசுவதை நிறுத்த வேண்டும் என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்