தற்போதைய செய்திகள்

பாஜக எம்.பி. மீதான பாலியல் புகார்.. "திரும்ப பெற்ற மைனர் பெண்" - மாஜிஸ்திரேட் முன் புதிய வாக்குமூலம்

தந்தி டிவி

பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 2 வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட நிலையில் அதன் மீது நடவடிக்கை எடுக்கவும், கைது செய்ய வலியுறுத்தியும் மல்யுத்த வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், வினேஜ் போகத், சங்கீதா போகத் மற்றும் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், 7 மல்யுத்த வீராங்கனைகளில் ஒருவரான மைனர் பெண்,காவல்துறை மற்றும் மாஜிஸ்திரேட் முன் அளித்த 2 வாக்குமூலங்களையும் வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 164 வது பிரிவின் கீழ் 17 வயதான அவர் புதிய வாக்குமூலத்தை மாஜிஸ்திரேட் முன் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாக்குமூலம் நீதிமன்றத்தின் முன் சாட்சியமாக கருதப்படுகிறது. இந்த வாக்குமூலத்தின் மூலம் குற்றச்சாட்டுகளைத் தொடர முடியுமா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும் என கூறப்படுகிறது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு