தற்போதைய செய்திகள்

"அம்மா..ஐயோ..காப்பாத்துங்க" சென்னையில் அதிர்ச்சி..சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக உறுப்பினர்

தந்தி டிவி

வில்லிவாக்கம் சிவன் கோயில் பகுதியில், இருசக்கர வாகனத்தில் வந்த சிறுவன் கூச்சலிட்டபடி அழுதுகொண்டே வந்துள்ளான். அங்கிருந்தவர்கள் வாகனத்தை நிறுத்தி, வாகனத்தை ஓட்டி வந்த நபரிடம் சிறுவன் அழுவதற்கான காரணம் கேட்டுள்ளனர். அப்போது அந்த நபர் மழுப்பிய நிலையில், சிறுவனிடம் காரணத்தை கேட்டுள்ளனர். லிப்ட் கேட்டு வாகனத்தில் வந்ததாகவும், இருசக்கர வாகனம் ஓட்டிய நபர், தன் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் சிறுவன் கூறியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதனைத் தொடர்ந்து, அவரது இருசக்கர வாகனத்தை போலீசார் சோதனை செய்தபோது, பாஜகவை சேர்ந்த நபர் என்பதும், அக்கட்சியின் உறுப்பினர் அடையாள அட்டையில், அவரது பெயர் பாலச்சந்திரன் என்பதும் தெரியவந்தது. இதனிடையே, சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பாலச்சந்திரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Jana nayagan Release | ஜனநாயகன் ரிலீஸ் தேதி அறிவிப்பு? - ட்விஸ்டுக்கு மேல ட்விஸ்ட்

Chennai Voting | சென்னையில் 3 நாட்கள் வாக்குப்பதிவு - வெளியான தகவல்

School Teacher | அரசு பள்ளிக்கு உள்ளேயே 6th டீச்சர் வெட்டி படுகொலை - உடனே நேரில் விரைந்த DSP

TVK Vijay Campaign | தள்ளிவைத்த விஜய்.. பரபரப்பு தகவல்

Chennai Raid | அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நிறுவனத்தில் பரபரப்பு ரெய்டு