தற்போதைய செய்திகள்

பண மோசடி வழக்கில் பாஜக பிரமுகர் கைது

தந்தி டிவி

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட விருதுநகர் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. சிவகாசி மாநகர பாஜக துணைத் தலைவர் பாண்டியனின் மகன்களுக்கு மத்திய அரசுத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, விருதுநகர் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ், 11 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பாண்டியன், இது குறித்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனிடையே, தலைமறைவாக இருந்த சுரேஷை, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்ற நடுவர் உத்தரவிட்டார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்