தற்போதைய செய்திகள்

பா.ஜ.க. நிர்வாகி உட்பட 43 பேர் மீது வழக்குப்பதிவு | BJP

தந்தி டிவி

மதுரையில் நீதிபதி இல்லம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜ.க. நிர்வாகி உட்பட 43 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் குறித்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும், மோதலை தூண்டும் வகையில் டிவிட்டரில் பதிவிட்ட பா.ஜ.க மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டு, 15 நாள் நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நீதிபதி இல்லத்தின் முன்பாக திரண்ட பா.ஜ.க.வினர், போலீஸ் வாகனத்தை மறித்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்நிலையில், நீதிபதி இல்லம் முன்பு அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் மகாசுசீந்திரன் மற்றும் அக்கட்சியினர் 42 பேர் மீது, தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்