தற்போதைய செய்திகள்

"பாஜகவால் அசைக்க முடியாது" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தந்தி டிவி

பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்டி நெருக்கடி கொடுப்பதால், அமலாக்கத்துறை சோதனை மூலம் திமுகவை மத்திய அரசு மிரட்டுகிறது என, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மயிலாடுதுறையில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக மூத்த முன்னோடி உறுப்பினர்கள் ஆயிரம் பேருக்கு, பொற்கிழிகள், மாற்றுத்திறனாளிகள் 60 பேருக்கு மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 300 பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார். பின்னர் விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ஈடி, மோடியை பார்த்து அச்சப்பட மாட்டோம் எனவும், திமுக கிளை செயலாளரை கூட பாஜகவால் அசைக்க முடியாது எனவும் கூறினார்.

TN Budget 2026 |Minister Marie Wilson | Total தமிழ்நாட்டுக்கும்.. லிஸ்ட் போட்டு அறிவித்த அமைச்சர்

🔴LIVE : CM விஜய்யின் முதல் பட்ஜெட் மார்க் போடும் Experts & தலைவர்கள்

TN Budget 2026 | "தாய் Care.." - முதல் பட்ஜெட்டில் ஸ்பெஷல் அறிவிப்பு

TN Budget 2026 | CM VIjay | 'கூவம்' குறித்து வந்த அறிவிப்பு.. அதிர்ந்த பேரவை

TN Budget 2026 | "எங்க புள்ள விஜி.." குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை.. பட்ஜெட்டில் நச் அறிவிப்பு