தற்போதைய செய்திகள்

கடித்து குதறிய பிட்புல் நாய், உயிர் பிழைத்த வினோதம்!

தந்தி டிவி

தான் வளர்த்த செல்ல நாய் ஒன்று தனது கால் விரலைக் கடித்துக் குதறியதால் தான் தன் உயிரே காப்பாற்றப்பட்டதாக ஒருவர் தெரிவித்த விநோத சம்பவம் பிரிட்டனில் நிகழ்ந்துள்ளது...

டேவிட் லின்ட்சே என்ற நபர் சோபாவில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த போது அவர் வளர்த்த நாய், டேவிட்டின் கால் கட்டை விரலைக் கடித்துக் குதறியுள்ளது... அருகில் இருந்த அவரது மனைவி இதைக் கண்டு அலறியுள்ளார்... பிறகு தான் டேவிட் உணர்ந்தார் தன் கால் மரத்துப் போயிருந்த விஷயத்தை. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், டேவிட் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, அவரது 2 தமனிகள் அடைபட்டதால் ரத்த ஓட்டம் இல்லாது போய், கால் துண்டிக்கப்படும் அபாயத்தில் இருந்தது பிறகு தான் தெரிய வந்தது. நாய் கடித்ததால் தான் இப்பிரச்சினை வெளிச்சத்திற்கு வந்ததாகவும், நாயை விட்டுக் கொடுக்கும் எண்ணம் இல்லை என்றும் டேவிட் தெரிவித்துள்ளார்...

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?