சிலி நாட்டில் முதன்முறையாக மனிதனுக்கு பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது... கடுமையான காய்ச்சல் அறிகுறிகளுடன் வந்த 53 வயது நபருக்கு பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டதாகவும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.