தற்போதைய செய்திகள்

'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு தடையா? - தமிழக அரசு பரபரப்பு தகவல்

தந்தி டிவி

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்திற்கு தடை ஏதும் விதிக்கவில்லை என மறுப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது.

'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு, தடை மற்றும் மறைமுக தடை விதிக்கப்பட்டதாக, தயாரிப்பாளர் தாக்கல் செய்த ரிட் மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த திரைப்படத்திற்கு தடை இதிக்கவில்லை என்றும், திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு எதிராக போராடியவர்களின் மீது சென்னை மற்றும் கோவையில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், திரைப்படம் எதிர்கொண்ட விமர்சனம், அறிமுகம் இல்லாதவர்களின் நடிப்பு, போதுமான வரவேற்பின்மை ஆகியவற்றால், திரையரங்கு உரிமையாளர்களே 7ஆம் தேதி தொடங்கி திரையிடுவதை நிறுத்திக் கொண்டதாக தோன்றுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விளம்பரம் தேடும் நோக்கில் மனுதார‌ர் மனுதாக்கல் செய்துள்ளதால், அபராத‌த்துடன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்