தற்போதைய செய்திகள்

கனல் கண்ணனுக்கு ஜாமின்..நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள்

தந்தி டிவி

திரைப்பட சண்டை பயிற்சியாளரும், இந்து முன்னணி நிர்வாகியுமான கனல் கண்ணனுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. கிருஸ்த்துவம் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டதாக திமுகவை சேர்ந்த ஜோசப் பெனடிக்ட் என்பவர் அளித்த புகாரின் பேரில், கனல் கண்ணன் கைது செய்து சிறையிலும் அடைக்கப்பட்டார். இதனிடையே, ஜாமின் கோரி கனல் கண்ணன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், மனு விசாரணைக்கு வந்த நிலையில், நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் கனல் கண்ணனுக்கு ஜாமின் வழங்கி உள்ளது. மேலும், நாகர்கோவில் சைபர் கிரைம் பிரிவு அலுவலகத்தில் வரும் 30 நாட்களுக்கு காலை மற்றும் மாலையில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்