தற்போதைய செய்திகள்

மீண்டும் இறங்கிய "கபாலி" காட்டு யானை - ரிவர்ஸ் கியரில் ஓட்டம் பிடித்த டிரைவர்

தந்தி டிவி

கேரளாவில் மலை சாலையில் மீண்டும் இறங்கிய காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிரப்பள்ளிபகுதியில் சுற்றி வரும் காட்டு யானை ஒன்று கடந்த 15 தினங்களுக்கும் மேலாக சோலையார் - மலக்கப்பாறை மலைசாலையில் முகாமிட்டுள்ளது...

கபாலி எனப்படும் இந்த யானையானது நேற்று பேருந்துக்கு வழிவிடாமல் சாலையில் சென்றது...

இதனால் சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் பேருந்து யானையின் பின்னாலேயே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அதேபோல், இன்று காலை மீண்டும் மலை சாலையில் இறங்கிய கபாலி யானை சுமார் அரை மணி நேரம் போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தியது.

இதனால் டீத்தூள் ஏற்றி வந்த லாரி, கார், பேருந்து உட்பட பல வாகனங்கள் பின்னோக்கி இயக்கப்பட்டன...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்