தற்போதைய செய்திகள்

கர்ப்பிணியை அனுமதிக்காத மருத்துவமனை...நடுரோட்டிலே போர்வைக்குள் நடந்த பிரசவம் - அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி

தன்னந்தனியாக வந்த நிறைமாத கர்ப்பிணியை அனுமதிக்க திருப்பதி அரசு மருத்துவமனை மறுப்பு தெரிவித்த நிலையில், சாலையில் அந்த பெண்ணிற்கு பிரசவம் ஏற்பட்டுள்ளது.

திருப்பதியில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் தன்னந்தனியாக அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் துணைக்கு யாரும் இல்லாததால் மருத்துவ நிர்வாகம் அவரை அனுமதிக்க மறுத்துள்ளது. இதையடுத்து, மருத்துவமனை அருகேயே சாலையில் பிரசவ வலியால் அந்த பெண் துடிதுடித்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், பெட் சீட்டுகளுடன் ஓடி வந்து, மறைப்பு ஏற்படுத்தி அந்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்துள்ளனர். இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம் தாயையும் குழந்தையையும் அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகிறது. அந்த பெண் தனது பெயரை கூட கூற முடியாத நிலையில் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதால், அவரை அங்குள்ள காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்