தற்போதைய செய்திகள்

பிறந்து 80 நாட்களில் உயிரிழந்த பெண் குழந்தை - போலீசார் தீவிர விசாரணை

தந்தி டிவி

உசிலம்பட்டி அருகே பிறந்து 80 நாட்களில் பெண் குழந்தை உயிரிழந்த நிலையில் கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிவராஜா - கருப்பாயி. இவர்களுக்கு 5 மற்றும் 3 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர்.

இதனிடையே இவர்களுக்கு 80 நாட்களுக்கு முன்பாக 3வதாக மீண்டும் ஆண் பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன.

ராமன் - லட்சுமி என குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய நிலையில் திடீரென பெண் குழந்தையான லட்சுமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

உடல் நலக்குறைவால் குழந்தை உயிரிழந்ததாக சொல்லப்பட்ட நிலையில் கொலையா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்