தற்போதைய செய்திகள்

3வது பிரசவத்திலும் பிறந்த பெண் குழந்தை... குடும்பத்துடன் சேர்ந்து கொடுமைப்படுத்திய கணவன் - நடுரோட்டில் நிற்கும் மனைவி..பரிதவிக்கும் பிள்ளைகள்

தந்தி டிவி

தூத்துக்குடி அருகே சாயர்புரம் பகுதியை சேர்ந்த மகாராஜன் என்பவர், தனியார் காற்றாலை நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். மகாராஜன் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெபகிருபா என்ற பெண்ணை மணந்து அவரை விவகாரத்து செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து, முதல் திருமணத்தை மறைத்து நடுவகுறிச்சியை சேர்ந்த அண்ணமணி என்ற பெண்ணை கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 3வதாக அண்ணமணி கருத்தரித்தபோது, கருக்கலைப்பு மாத்திரை கொடுத்து கணவன் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, தனது தாய் வீட்டுக்கு சென்ற அன்னமணிக்கு, 3வதாக பெண் குழந்தை பிறந்தது. இதனால் ஆத்திரமடைந்த மகராஜன், மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில், 3 குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அன்னமணி, தனது கணவர் விவாகரத்து கேட்டு கொலை மிரட்டல் விடுவதாகவும், முதல் திருமணத்தை மறைத்து திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் புகார் மனு அளித்தார்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை