தற்போதைய செய்திகள்

கழிவறையில் சடலமாக கிடந்த ஆண் சிசு - திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பரபரப்பு

தந்தி டிவி

திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் கழிவறையில் சடலமாக கிடந்த ஆண் சிசுவை மீட்ட போலீசார் விசாரித்து வருகின்றனர். மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு கழிவறையில் சந்தேகத்திற்கு கிடமாக அட்டை பெட்டி ஒன்று இருந்துள்ளது. அதனை சோதனையிட்ட மருத்துவ ஊழியர்கள், பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தை சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது, தொடர்பாக போலீசாருக்கு தகவலும் அளித்தனர். குழந்தையின் கழுத்து மற்றும் தலையில் காயம் இருப்பதால் கொலையா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். கட்டடத்தில் சிசிடிவி கேமரா வைக்கப்படவில்லை என்பதால் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் போலீசார் திணறி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்