தற்போதைய செய்திகள்

திடீரென ராகுலுக்கு கடிதம் அனுப்பிய அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்!

தந்தி டிவி

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ள அர்ச்சகர் ஆச்சார்ய சத்யேந்திர தாஸ், உயரிய நோக்கத்திற்காக தாங்கள் இந்த நடைப்பயணத்தை மேற்கொண்டு வருவதாகவும், நாட்டு மக்கள் நலனுக்காகவும், அவர்களின் மகிழ்ச்சிக்காகவும் உங்கள் நல்ல நோக்கம் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ராமப்பிரானின் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுடன் இருக்கும் எனவும் அந்த கடிதத்தில் அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்