தற்போதைய செய்திகள்

ஏ.டி.எம். கொள்ளை முயற்சி...போலீசாரின் சாமர்த்தியத்தால் தப்பிய பல லட்சம் பணம் - வெளியான சிசிடிவி

தந்தி டிவி

சென்னை ஆவடி அருகே, வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். ஆவடி அருகே பொத்தூரில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் நுழைந்த மர்ம நபர், அங்கிருந்த அனைத்து இணைப்புகளையும் கட்டிங் பிளேடு மூலம் துண்டித்துவிட்டு கொள்ளையடிக்க முயன்றார். மேலும், ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க முயன்றபோது சத்தம் கேட்டதால், அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இரும்புக்கதவை திறந்து, அந்த நபரை சுற்றிவளைத்து பிடித்தனர். இதுகுறித்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன. வியாசர்பாடி எம்.கே.பி. நகரை சேர்ந்த எட்வின் என்பவர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்