தற்போதைய செய்திகள்

சினிமா உதவி ஒளிப்பதிவாளர் தூக்குப்போட்டு தற்கொலை

தந்தி டிவி

மாங்காடு அடுத்த மதனந்தபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் விக்னேஷ். சினிமா துறையில் உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார்.

இவர் கடந்த ஒரு மாதமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டின் அறைக்குள் சென்ற விக்னேஷ், நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால், குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது, விக்னேஷ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவலின் பேரில் வந்த போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது, காதல் தோல்வியால் விக்னேஷ் மனை உளைச்சலில் இருந்தது தெரியவந்தது.

எனினும் வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்