தற்போதைய செய்திகள்

ஆசியக்கோப்பை டேபிள் டென்னிஸ்.. சீன வீராங்கனையை வீழ்த்திய இந்திய வீராங்கனை

தந்தி டிவி

ஆசியக் கோப்பை டேபிள் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

ஆசியக் கோப்பை டேபிள் டென்னிஸ் தொடர் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது.

இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், சீன தைபே வீராங்கனை சென் சு யு - உடன் மனிகா பத்ரா மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 4க்கு 3 என்ற கேம் கணக்கில் மனிகா பத்ரா போராடி வெற்றி பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

இதன்மூலம், ஆசியக் கோப்பை டேபிள் டென்னிஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மனிகா பத்ரா பெற்றுள்ளார். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்