தற்போதைய செய்திகள்

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு : தமிழ் சினிமா நடிகர் கைது | Aarudhra

தந்தி டிவி

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி தொடர்பான வழக்கில் சினிமா நடிகரான ரூசோ என்பவரை கைது செய்த போலீசார் அவர் கணக்கில் இருந்த ஒரு கோடியே 40 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

தமிழகம் முழுவதும் 13 கிளைகளோடு இயங்கி வந்த ஆருத்ரா நிதி நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் வந்த நிலையில் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இடைத்தரகர்களாக செயல்பட்டு வந்த 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ரூசோ என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரின் வங்கி கணக்கில் இருந்த ஒரு கோடியே 40 லட்ச ரூபாய் பணம் முடக்கப்பட்டுள்ளது. நடிகர் ஆர்.கே. சுரேஷ் உடன் ஒயிட் ரோஸ் என்ற படத்தில் மற்றொரு கதாநாயகனாக நடித்தவர் ரூசோ என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேநேரம் வழக்கில் தலைமறைவாகி உள்ள முக்கிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்