தற்போதைய செய்திகள்

சொகுசு காரில் வந்து உல்லாசமாக திருட்டு..வெளியூர் சென்று திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி...

தந்தி டிவி

பல்லடம் அருகே, சொகுசு காரில் வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் லாரன்ஸ். இவர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வெளியூர் சென்று திரும்பிய நிலையில், தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 2 சவரன் நகை, 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சொகுசு காரில் வந்த மர்ம நபர்கள் வீட்டின் உள்ளே செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்