தற்போதைய செய்திகள்

“ஆணை கூட விட்டு வைக்காத அர்னவ்... பெண்கள், திருநங்கை, பைலட் இளைஞர்“ - பகீர் தகவல்கள்

தந்தி டிவி

கடந்த ஆண்டு சமூகவலைதளங்களில் ஹாட் டாபிக்காக இருந்து வந்தது சின்னத்திரை நடிகர்களான அர்னவ் - திவ்யா தம்பதி விவகாரம்... ஏற்கனவே, திருமணமாகிய திவ்யாவுக்கு, 5 வயதில் மகள் இருந்த நிலையில், கணவருடன் விவாகாரத்தானது. அதன் பிறகு தனியார் சேனலில் ஒளிபரப்பான சீரியலில், அர்னவ்வும், திவ்யாவும் நடித்தபோது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில், திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சிறிது நாட்களிலேயே கர்ப்பமான திவ்யாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்த நிலையில், அர்னவ் தன்னை ஏமாற்றிவிட்டதாக திவ்யா பகீர் குற்றச்சாட்டை எழுப்பியது, சின்னத்திரை வட்டாரத்தையே திரும்பி பார்க்க வைத்தது. சீரியலில் நடிக்கும் நடிகையுடன், அர்னவ் நெருக்கமான உறவில் இருப்பதாவும், அதனை தட்டிக் கேட்டதற்காக தன்னை கண்மூடித்தனமாக தாக்கியதாகவும் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்தார். தனது உயிருக்கு ஏதாவது நேர்ந்தால், அதற்கு காரணம் அர்னவ்தான் எனக் கூற, இந்த குற்றச்சாட்டுக்கு அர்னவ்வும் விளக்கமளித்திருந்தார்.

அதன் பிறகு திவ்யா அளித்த புகாரின் பேரில் அர்னவை போலீசார் கைது செய்தது... திவ்யாவிற்கு குழந்தை பிறந்தது என பல்வேறு பிரச்சினைகளுக்குப் பிறகு நாட்களும் ஓடின. இந்த நிலையில், நடிகர் அர்ணவ் எப்படிப்பட்ட மனிதர் என்பதை, திவ்யா கூறியிருக்கும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. பெண்களை மட்டும் அர்ணவ் சீரழிக்கவில்லை என்றும், திருநங்கையுடன் 2 ஆண்டுகள் வாழ்ந்து, அவரது வாழ்க்கையில் விளையாடியதாகவும் திவ்யா கூறியிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

🔴LIVE : பழனி தைப்பூசம் 2026 | Palani | Thaipusam 2026

🔴LIVE : பழனி தைப்பூசம் 2026 | Palani | Thaipusam 2026

Gold Price | Union Budget | "தங்கம் விலை.. இனி இப்படி தான்..." - பரபரப்பை கிளப்பிய பாஜக சரவணபிரபு

Chennai | Union Budget | "மத்திய பட்ஜெட்டால் தமிழ்நாட்டிற்கு" - சென்னையில் முக்கியப்புள்ளி ஓபன் டாக்

Union Budget 2026 Explain Tamil | ``பட்ஜெட்டில் அறிவித்ததும் திடீர் சரிவு ஏன்?’’