தற்போதைய செய்திகள்

கிராம சபை கூட்டத்தில் தகராறு ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மீது கல் வீச்சு - வீடியோ வெளியாகி பரபரப்பு

தந்தி டிவி

தர்மபுரி மாவட்டம் காட்டம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் இளைஞர்கள் சிலர் அடிப்படை வசிதிகள் கேட்டு ஊராட்சி மன்ற தலைவியிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அப்போது, ஊராட்சி மன்ற தலைவியை தரக்குறைவாக பேசி, ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் சத்தியபிரபு, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவதாம் முற்றி தகராறு ஏற்படவே, சத்தியபிரபுவை சிலர் கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், காயமடைந்த சத்தியபிரபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தின் காட்சிகள் இணையத்தில் வெளியான நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்