தற்போதைய செய்திகள்

அரக்கோணம் ரயில் நிலையத்தில் கைக்குழந்தையுடன் லிஃப்டில் சிக்கிய சிறுவன்

தந்தி டிவி

அரக்கோணம் ரயில் நிலையத்தில் கைக்குழந்தையுடன் லிஃப்டில் சிக்கிய சிறுவன்

தாய் டிக்கெட் எடுக்க சென்ற நிலையில், லிஃப்டில் சிக்கிக் கொண்ட 12 வயது சிறுவன்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இன்று காலை யாஸ்மின் என்பவர் தன் குழந்தையுடன் சென்னை செல்ல அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு வந்தார். அவரை வழி அனுப்ப அவரது மகன் ரியாஸ் உடன் வந்தார்.

இதனையடுத்து ரயில் வரும் இரண்டாம் நடை மேடைக்கு படிக்கட்டு உதவியுடன் மேம்பாலத்திற்கு மேலே சென்ற  ரியாஸ், கீழே  இறங்குவதற்காக லிப்ட் பயன்படுத்தி உள்ளார்.

அப்போது லிப்ட்டில் கோளாறு ஏற்பட்டு பாதியில் நின்றது.

இது சற்றும் எதிர்பாராத சிறுவன் அதிர்ச்சி அடைந்து செய்வதறியாது திகைத்துள்ளார்.

இந்நிலையில் அவர்களை தேடி வந்த தாய் மகன் மற்றும் குழந்தை லிப்டில் சிக்கியதை அறிந்து அதிர்ச்சி அடைந்து கதறி உள்ளார்

உடனடியாக விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், லிப்ட்டை சரி செய்து இயக்கினர். பின்னர் சிறுவன் மற்றும் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்