தற்போதைய செய்திகள்

நெருங்கும் தெலுங்கு வருடப்பிறப்பு...ரூ.3 கோடிக்கு விற்பனையான ஆடுகள்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வார சந்தையில் தெலுங்கு வருடப் பிறப்பையொட்டி சுமார் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாகின. வரும் புதன்கிழமை தெலுங்கு வருடப்பிறப்பு கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு போச்சம்பள்ளி வார சந்தைக்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள், 5 ஆயிரத்துக்கும் அதிகமான கோழிகள் கூடுதலாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட வியாபாரிகளும் பொதுமக்களும் சந்தையில் குவிந்தனர். வழக்கமாக 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் 10 கிலோ எடை கொண்ட ஆடு, இன்று 20 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது. எடைக்கு ஏற்றவாறு 7 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்கப்பட்ட நிலையில், இன்று ஒரு நாளில் மட்டும் 3 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்