தற்போதைய செய்திகள்

ஜே.பி.நட்டாவை சந்தித்த பின் அண்ணாமலை போட்ட ட்வீட்

தந்தி டிவி

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் தலைமை பொறுப்பை தென் ஆப்பிரிக்கா வகித்து வருகிறது. தென்னாப்பிரிக்காவின் ஆளுங்கட்சியான ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி, வரும் மாதம் 18 ஆம் தேதி ஜோகன்னஸ்பர்க்கில், பிரிக்ஸ் அரசியல் கட்சிகளுக்கான உச்சி மாநாட்டை நடத்த உள்ளது. இதில் பாஜகவின் பிரதிநிதிகளாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆந்திராவை சேர்ந்த வினுஷா ரெட்டி, சத்யேன் குலாப்கர், புஷ்கர் மிஸ்ரா ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இதையொட்டி, அண்ணாமலை உட்பட 4 பேரும், பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்தித்தனர். இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, உச்சி மாநாட்டிற்கு தேவையான ஆலோசனைகளை பெற்றதாகவும், இந்த சந்திப்பு மகிழ்ச்சியானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்