தற்போதைய செய்திகள்

"பெட்ரோல்,டீசல் விலையை குறைக்கவில்லை என்றால் போராட்டம் தீவிரமாகும்" - அண்ணாமலை அறிக்கை

தமிழக அரசு பெட்ரோல் விலையை குறைக்கும் வரை போராட்டம் தொடரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தந்தி டிவி

தமிழக அரசு பெட்ரோல் விலையை குறைக்கும் வரை போராட்டம் தொடரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், போராட்டத்துக்கு மக்கள் ஆதரவளித்ததாகவும், அவர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார். இனி, மக்களுக்கான பயணம் தொய்வின்றி தொடரும் என்ற அவர், திமுக தனது தேர்தல் அறிக்கையை நிறைவேற்றவில்லை எனக் கூறியுள்ளார். மத்திய அரசு, பெட்ரோல், டீசல் விலையை இரண்டு முறை குறைத்துள்ளதாகவும், தமிழக அரசு குறைக்கவில்லை என்றும் சாடியுள்ள அண்ணாமலை, இனியும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநிலம் போராட்டம் தீவிரமாக நடக்கும் எனக் கூறியுள்ளார். பெட்ரோல் விலை குறைப்பு வரும்வரை போராட்டம் நிற்காது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்