தற்போதைய செய்திகள்

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள அண்ணாமலை - கருப்பு சட்டை அணிந்து பரபரப்பு ட்வீட்

தந்தி டிவி

மேகதாது அணை விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருப்பு சட்டை அணிந்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்...

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதாக கூறி, மாநிலம் முழுதும் பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இது குறித்து ட்வீட் செய்துள்ள அண்ணாமலை, தமிழ்நாட்டிற்கான காவிரி நீர் பங்கீட்டை சரிவர வழங்காமல் கர்நாடக அரசு புறக்கணிப்பதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் கொள்கையற்ற சுயநலக் கூட்டணிக்காக தமிழ்நாடு விவசாயிகளின் நலனை திமுக அரசு புறக்கணிப்பதாகவும் தெரிவித்துள்ளார். தும்பை விட்டு வாலை பிடித்தக் கதையாக கருணாநிதி ஆட்சியில் காவிரி ஒப்பந்தத்தைப் புதுப்பிக்காமல் விட்டதாகவும், தற்போதைய திமுக அரசும் கர்நாடக காங்கிரஸ் ஆட்சியின் தமிழக விரோத நடவடிக்கைகளை கண்டுக்கொள்ளாமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதனிடையே பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், தமிழ்நாடு அரசை கண்டித்து கருப்பு சட்டை அணிந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்