தற்போதைய செய்திகள்

"ரஃபேல் வாட்ச்சில் அண்ணாமலை முகம்" - பரபரப்பை பற்ற வைத்த காங்கிரஸ் தலைவர்கள்

தந்தி டிவி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உண்மையான முகம் ரபேல் வாட்ச் பில் விவகாரத்தில் தெரிய வருகிறது என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

நான்கு ஆடுகளை மட்டுமே வைத்திருந்ததாக கூறிய பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மாதம் ஒன்றுக்கு மூன்றே முக்கால் லட்சம் வீட்டு வாடகை எப்படி கொடுக்க முடிகிறது ? என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் தமது டிவிட்டர் பதிவில், 50 ஆண்டு கால பொது வாழ்க்கையில் இருமுறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும், தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில், நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அடுக்குமாடி குடியிருப்பில் 16 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு குடியிருப்பதாகவும், ஒரு வருடமாக வாடகை கட்டவில்லை என நோட்டீஸ் பெறும் நிலையில் , இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் நான்கு ஆடுகளை மட்டுமே வைத்திருந்ததாக கூறிய பாஜக தலைவர் அண்ணாமலை, மூன்று லட்ச ரூபாய் கை கடிகாரமும் எப்படி அணிய முடிகிறது ? என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு யார் பணம் கொடுக்கிறார்கள் ? இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்