தற்போதைய செய்திகள்

அண்ணா பல்கலை. தேர்வு முடிவு நிறுத்திவைப்பு - மாணவர்கள் வைக்கும் முக்கிய கோரிக்கை

தந்தி டிவி
• பல தனியார் பொறியியல் கல்லூரிகளின் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக் கழகம் நிறுத்தி வைத்துள்ள நிலையில், தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிடுமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். • அண்ணா பல்கலைக்கழகத்தின் 3, 5, 7 ஆகிய செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியாகின. • இதில் பல தனியார் கல்லூரிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளிவராமல் உள்ளது. • இதனால் மாணவர்கள் தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். • இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பொறியியல் கல்லூரிகள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும், விடைத்தாள் திருத்துவதற்கு ஆசிரியர்களை அனுப்பாத கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. • இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் என மாணவர்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி