தற்போதைய செய்திகள்

அண்ணா பல்கலை. உறுப்பு கல்லூரியில் முறைகேடு.. தலைமறைவாக உள்ள ஊழியருக்கு போலீசார் வலைவீச்சு- கோடி கணக்கில் மோசடி...

தந்தி டிவி

காஞ்சிபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி வங்கி கணக்குகளில் இருந்து, போலியாக கையெழுத்து போட்டு, கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்த ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் அருகே பொன்னேரிக்கரை பகுதியில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட உறுப்பு பொறியியல் கல்லூரியில், உதவிப் பேராசிரியர்களுக்கும், ஒப்பந்தப் பணியாளர்களுக்கும், கடந்த சில மாதங்களாக ஊதியம் முறையாக வழங்கவில்லை என புகார் எழுந்தது. மேலும் கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் செலுத்திய டெபாசிட் பணத்திலும் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விசாரணையில், கல்லூரியின் வங்கி கணக்குகளை நிர்வகித்து வந்த அலுவலர் பிரபு என்பவர், இந்த முறைகேட்டில் ஈடுபட்டது அம்பலமானது. கல்லூரி முதல்வர் பெயரில் இருந்த காசோலையில், கையெழுத்து போட்டு,

3 கோடியே 80 லட்சம் ரூபாயை, பல்வேறு வகைகளில் முறைகேடு செய்து, பிரபு பணத்தை செலவு செய்தது பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில், தலைமறைவாக உள்ள பிரபுவை போலீசார் தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்