தற்போதைய செய்திகள்

ஆந்திரா காவல்நிலைய பீரோவில் காணாமல் போன 105 கிலோ வெள்ளிநகை! - அதிர்ச்சியில் உறைந்த தமிழக நகை வியாபாரி...

தந்தி டிவி
• தமிழகத்தை சேர்ந்த வெள்ளி வியாபாரிகளிடம் இருந்து 105 கிலோ வெள்ளி பொருட்களை ஆந்திர போலீசார் கைப்பற்றிய நிலையில், கைப்பற்றப்பட்ட பொருள்கள் மாயமானதாக போலீசார் தெரிவித்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. • ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். • அப்போது தமிழகத்தை சேர்ந்த வெள்ளி வியாபாரிகளான மணிகண்டன், சந்தனபாரதி ஆகியோரிடம் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 105 கிலோ வெள்ளி பொருட்களையும், 2 லட்ச ரூபாயையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். • இந்த பொருட்களை போலீசார் கரூவுலத்தில் வைக்கவில்லை என்றும், வருமானவரித் துறை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்க வில்லை என்றும் கூறப்படுகிறது. • அப்போது, கர்னூல் காவல்நிலைய ஆய்வாளராக இருந்த விக்ரமசிங்கா நகைகள் மற்றும் பணத்தை காவல்நிலைய பீரோவில் வைத்ததாக கூறப்படுகிறது. • இதன் பின்பு மூன்று காவல் ஆய்வாளர்கள் பணிக்கு வந்து சென்ற நிலையில், இந்த வழக்கில் நகைகளை மணிகண்டன் மற்றும் சந்தனபாரதியிடம் ஒப்படைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. • இந்நிலையில், தற்போது காவல் ஆய்வாளராக இருக்கும் ராமலிங்கையா, நகைகள் மாயமானதாக தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்