ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான யானை ஜெயமால்யதா, தாக்கப்படுவதாக பீட்டா அமைப்பு செய்தி வெளியிட்டது.
இது தொடர்பாக தமிழக அரசு தனிக்குழு அமைத்து விசாரணை மேற்கொண்ட நிலையில், அதன் அறிக்கையை அசாம் மாநில அரசுக்கு அனுப்பியது.
இதனிடையே, யானை தொடர்ந்து தாக்கப்படுவதாக, இரண்டு நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் பீட்டா அமைப்பு செய்தி வெளியிட்டது.
இதன் காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த அசாம் மாநில தலைமை வன காவலர் ஆனந்த், யானையை பரிசோதித்தார்.
பின்னர், யானை நலமுடன் இருப்பதாகவும், யானைக்கு எந்த காயமும் இல்லை எனவும் கூறினார்.
மேலும், பீட்டாவின் அறிவிப்புகள் உண்மைக்கு புறம்பானது என்றார்.