தற்போதைய செய்திகள்

முதியவரை கட்டையால் தாக்கி கொலை.. பேருந்து நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

உடுமலை அருகே பேருந்து நிலையத்தில் மது அருந்த அனுமதிக்காத ஆதரவற்ற முதியவரை கட்டையால் தாக்கி கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர். கொங்கலக்குறிச்சி பேருந்து நிலையத்தில், ஆதரவற்ற முதியவர் ஒருவர் தங்கியிருந்தார். வியாழக்கிழமை இரவு, அதே பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் மது பாட்டிலுடன் பேருந்து நிலையத்துக்குச் சென்றபோது, அந்த முதியவர் மது அருந்த அனுமதி மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த பழனியப்பன் அருகில் இருந்த கட்டையை எடுத்து தாக்கியதில் அந்த முதியவர் உயிரிழந்தார். மறுநாள் காலை இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் பழனியப்பனை போலீசார் கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்