தற்போதைய செய்திகள்

அரசு அதிகாரியாக அசாத்திய நடிப்பு.. மொத்த பொருளும் சுருட்டி விபூதி அடித்த நபர்

தந்தி டிவி

ராசிப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் பரமசிவன்... இவரது வீட்டிற்கு சோலார் பேனலை ஆய்வு செய்ய அரசு சார்பில் வந்துள்ள அதிகாரி எனக் கூறி, ஒருவர் வந்துள்ளார். பரமசிவத்தை பேனல் அருகே சென்று மின்சாரம் வருகிறதா எனப் பார்க்க சொல்லிவிட்டு, வீட்டில் இருந்த 9 பவுன் நகைகளை அவர் திருடிச் சென்றுள்ளார். இது தொடர்பாக, சூலூர் காவல் நிலையத்தில் பரமசிவன் புகார் அளித்த நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சம்பவத்தில் ஈடுபட்டவர் ஊத்துப்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து என்பதும், தொடர்ந்து இதே பாணியில் அவர் திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து, அவரிடமிருந்து 30 பவுன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார், மாரிமுத்துவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்