தற்போதைய செய்திகள்

முன்னாள் அமைச்சர் முன் தீக்குளிக்க முயன்ற முதியவர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

தந்தி டிவி

சொத்து பிரச்சனை காரணமாக வீட்டை இழந்த முதியவர் ஒருவர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் பிறந்த நாளை ஒட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மரியாதை செலுத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வருகை தந்தார். அப்போது, ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த முதியவர் ஒருவர் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக முதியவரை நெருங்கிய போலீசார், அவரை தடுத்து நிறுத்தியதுடன், விசாராணை மேற்கொண்டனர். அதில், சொத்து பிரச்சனை காரணமாக வீட்டை இழந்த விரக்தியில் முதியவர் தீக்குளிக்க முயன்றது தெரிய வந்தது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்