தற்போதைய செய்திகள்

கிராம‌ப்புற மாணவர்களை அரசு அதிகாரிகளாக மாற்ற முயற்சி....இளைஞர்களை நல்வழிப்படுத்தும் விஏஓ

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட கிளாக்குளத்தை சேர்ந்தவர் சிவராமன். இவர், குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று ஶ்ரீவைகுண்டத்தை அடுத்த தெற்கு காரசேரியில் கிராம நிர்வாக அலுவலராக பணியினை தொடங்கினார். பின்னர், புதுக்குடி, கால்வாய், வெள்ளூர் கிராமங்களுக்கு பணிமாறிய சிவராமன், தற்போது வடவல்லநாடு கிராமத்தில் பணியில் உள்ளார். அவர் பணி புரியும் கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்த வந்த நிலையில், வடவல்லநாடு கிராமத்திலும், மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளில் பங்கேற்க பயிற்சி அளித்து வருகிறார். இவரிடம் பயிற்சி பெற்ற 200க்கும் மேற்பட்டோர் பல்வேறு அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர். இளைஞர்களை ஊக்குவித்து நல்வழிப்படுத்தி, வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு வழிவகுத்து வரும் கிராம நிர்வாக அதிகாரி சிவராமனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்