தற்போதைய செய்திகள்

வாழ்த்து மழையில் நனைந்த 82 வயது முதியவர்..! - சேலத்தில் அரங்கேறிய சுவாரசியம்

தந்தி டிவி

தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த வரதராஜுலு என்பவர், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி கடந்த 2000-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அதன்பின்னர் தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தனியார் கல்லூரி ஒன்றில் "திருமூலரின் திருமந்திரம் ஒரு சமூகப் பார்வை" என்ற தலைப்பில் படித்து பட்டம் பெற்றுள்ளார். இந்த நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் கையில், வரதராஜுலு முனைவர் பட்டம் பெற்றார். 82 வயதில் முனைவர் பட்டம் பெற்ற அவருக்கு சக முனைவர்கள் வாழ்த்து மழையில் நனைய வைத்தனர். வாழும் காலம் முழுவதும் படிக்காமல் வாழ்வது, படித்துக் கொண்டே வாழ்வது என்று இரண்டு ரகங்கள் உள்ளன. இதில், வாழ்நாள் முழுவதும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தாம் வாழ்ந்து வருவதாக வரதராஜுலு கூறினார். கல்வி கற்க வயது தடையல்ல என்பதை இளைய தலைமுறையினர் பின்பற்ற வேண்டும் என்பதே தனது எண்ணம் என்றும் அவர் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்