தற்போதைய செய்திகள்

இறந்தவரின் தொடையில் உயிருடன் இருந்த பாம்பு - பிரேத பரிசோதனையில் உஷ்.. உஷ்.. சத்தம் - அலறி ஓடிய பெண்

தந்தி டிவி

அமெரிக்காவில் இறந்த நபர் ஒருவரது தொடையில் இருந்து உயிருடன் பாம்பு ஒன்றை கண்டுபிடித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின் மேரிலாண்ட்டை சேர்ந்தவர் ஜெசிக்கா லோகன். பிரேத பரிசோதனை நிபுணரான இவர் விரும்பியே அந்த பணியை செய்து வருகிறார். இந்நிலையில், தங்களின் பணி குறித்து மனம் திறந்து பேட்டி அளித்த அவர், இறந்த சடலங்களை பிரேத பரிசோதனை செய்யும் ஏற்படும் இன்னல்களை பட்டியலிட்டார். பொதுவாக அழுகி போன உடல்களில் பல்வேறு பூச்சிகள் மற்றும் வண்டுகள் காணப்படுவது சகஜம் என்றாலும், ஒரு முறை ஏரியில் இருந்து மீட்கப்பட்ட சிதைந்த உடலை பிரேத பரிசோதனை செய்த போது, அவரது உடலில் உயிருடன் பாம்பு ஒன்று இருந்ததாக அவர் கூறியுள்ளார். இப்படி இவர் பகிர்ந்து கொண்ட பணி அனுபவம் தற்போது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்